டி. ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இது நம்ம ஆளு படம், சிலம்பரசன், நயன் தாரா மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை வித்யாசமான கதைக்களத்தில் பணியாற்றி பாண்டிராஜ், நகரத்தில் நடக்கும் ரொமாண்டிக் கதையை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷல் டி. ராஜேந்தரின் இளையமகன் குறலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பதே அது. செப்டம்பர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.