எளிமை விரும்பிகளுக்கு பிடிக்கும் வகையில் எளிதான இந்த ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?
பிளாஸ்டிக் கயிறு, வெவ்வேறு வடிவங்களில் மணிகள், கட்டர்
எப்படி செய்வது?
ஃபேன்ஸி ஸ்டோர்களில் பிளாஸ்டிக் கயிறுகள் கிடைக்கும். மிகவும் குறைந்த விலைதான் இது. வாங்கும் கயிறில் கழுத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒரு துண்டை வெட்டிக் கொள்ளுங்கள். அதில் இப்படி மணிகளை மாறி மாறி கோர்த்துக் கொள்ளுங்கள்.
குறைவான மணிகளைக் கோர்த்தாலே போதும், பிறகு இரண்டு முனைகளையும் சேர்த்து ஒரு சுருக்கு முடிச்சு போடுங்கள்.
சுருக்கு முடிச்சை நன்றாக இழுத்து விடுங்கள்.
இதோ ஸ்டேட்மெண்ட் நெக்லஸ் தயார், இதை சுடிதார், ஜீன்ஸ் அணியும் போது அணியலாம்.
can anyone notify me how to get these materials in chennai?
thanx in advance