15 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கான தனது விமான சேவையை மீண்டும் துவக்க உள்ளது. இதுகுறைத்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவிலிருந்து மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதாகவும் 1000 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகவும் அவர்களின் பயன்பாட்டிற்காக விமான சேவை இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கான விமான சேவையில் அறிமுக சலுகைகளை அறிவிக்க உள்ளது ஏர் இந்தியா.