பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை, பள்ளி அலுவலர்கள் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைக் கண்டித்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பெங்களூருவின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்றனர். பின்னர் ஹெச்.ஏ.எல். காவல் நிலையம் அருகே திரண்ட பெற்றோர், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும், காவல் துறை ஆணையர் ராகவேந்திர அவுராத்கரை முற்றுகையிட்டு, இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏன் இதுவரை கைது செய்யப் படவில்லை எனக் கேட்டு வாக்குவாதம் செய்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை கர்நாடக அரசு.
இப்படிப் போனால்
நம்ம பிள்ளைகள் அழிகிறதா?