கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!

TamilNadu Logoதமிழக அளவில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/-வீதம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

மார்ச் 2014-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதி 1173 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1176 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது மதிப்பெண் சான்று, சாதிச்சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட Bonafide சான்றுகளின் நகல்களுடன் அவர்கள் +2 பயின்ற மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

1 thought on “பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s