உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக ரஷ்யா ராணுவ அதிகாரி மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பேசிக் கொள்ளும் ஆடியோ பதிவை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
விமான விபத்து குறித்து கிளர்ச்சியாளர்கள் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்கின்றனர். அதில் கிளர்ச்சியாளர் ஒருவர், நாங்கள் தற்போது ஒரு விமானத்தை வீழ்த்தினோம். அதில் 200 பேர் பயணித்தனர் என்று கூறுகிறார். மேலும் இது நூறு சதவிகிதம் பயணிகள் விமானம் எனவும் எவ்வித ஆயுதங்களும் இதில் கிடைக்கவில்லை எனவும் கூறுகிறார்.
மற்றொரு உரையாடலில் ‘மலேசிய விமானம் என தொலைக்காட்சியில் கூறுகிறார்கள், அது உக்ரைனில் என்ன செய்கிறது எனவும், போர் நடைபெறும் போது இந்த விமானம் அங்கே பறந்திருக்கக் கூடாது எனவும் பேசுகிறார்கள். விமானம் மீது தாக்குதல் நடத்தியது யார் எனவும் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆடியோக்களின் நம்பகத்தன்மை குறித்து ரஷ்யா வெளியுறத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆரம்பம் முதலே உக்ரைன் அரசு கிளர்ச்சியாளர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறதே தவிர, இதுவரை சர்வதேச விசாரணைக்குழு அமைக்கும் எந்த முயற்சியிலும் அது இறங்கவில்லை எனவும் ரஷ்யா கேட்கிறது.