அரசியல், இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு

இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

crime against women

பத்தாம் வகுப்பு மாணவி கடத்தல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன்,பிச்சையம்மாள் தம்பதியினரின் 15 வயது மகள், வத்திராயிருப்பில் உள்ள பெண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 14-ம் தேதி பள்ளி செல்வதாகக் கூறிச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரித்ததில் அவர் அன்று பள்ளிக்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அக்கம் பக்கம் விசாரித்ததில் நத்தம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜேஸ் என்பவர் மாணவியைக் கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.

வரதட்சணை கேட்டு பெண்ணிடம் கொடுமை
கமுதி அருகே பெண்ணிடம் ரூ.1 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி காவல் நிலைய சரகம் அவத்தாண்டையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் இந்திரா(23) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த கோடாங்கி மகன் செல்லத்துரை என்பவர் திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்குப் பின்பு ரூ.1 லட்சம் வரதட்சணை பணம் வாங்கித்தரும்படி இந்திராவை கணவர் செல்லத்துரை, மாமனார் கோடாங்கி, மாமியார் ராக்கம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கமுதி மகளிர் காவல் நிலையத்தில் இந்திரா புகார் செய்தார். உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன் உத்தரவில் காவல் ஆய்வாளர் மலர், சார்பு ஆய்வாளர்கள் சத்தியா, சித்ரா தேவி ஆகியோர் செல்லத்துரை உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
கிருஷ்ணகிரியில் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவியை குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தன் காதலனுடன் ராயக்கோட்டை அருகே உள்ள மலைப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 4 இளைஞர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காதலித்து மணந்த மனைவியை கணவனே எரித்து கொலை!

சிதம்பரம் அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள் சீதா (31). இவரும், பெருமாத்தூரைச் சேர்ந்த சரவணன் (28) என்ற வாலிபரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். சீதா அதே பகுதியில் உள்ள சுத்திகரிக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 19-ம் தேதி வேலைக்கு சென்ற சீதா காணவில்லை. இதுகுறித்து சீதாவின் தந்தை பஞ்சநாதன் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர்.

இதனையடுத்து கணவர் சரவணன் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஜூலை 15-ம் தேதி சரணடைந்தார். சரணடைந்த சரவணனை நீதிபதி கார்த்திகேயன் புவனகிரி போலீஸாரிடம் ஒப்படைத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சரவணனை கைது செய்த புவனகிரி போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகியோர் சேர்ந்து சீதாவை சிதம்பரம் அருகே சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார்டனுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் அந்த உடலை அங்கேயே புதைத்தது தெரிய வந்துள்ளது. பின்னர் புவனகிரி போலீஸார் சீதா காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக மாற்றி கணவர் சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர். கணவர் சரவணனின் தாயார் செல்வி (55), சகோதரி சகுந்தலா (39), சகோதரியின் கணவர் வெங்கடேசன் (57) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

“இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழக் காவற்றுறை தான் காரணம். அவர்கள் கடும் நடடிக்கை எடுக்காமையே இதற்குக் காரணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.