ஹன்சிகா மோத்வானியுடன் இணையும் ரோமியோ ஜூலியட் படம் ஜெயம் ரவிக்கு பிரேக் தரும் என்று அவருடைய படக்குழுவினர் உற்சாகமாக சொல்கிறார்கள். இளைஞர்களை கவரும் காதலும் காமெடியும் இருப்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயக்கியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான்.