தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரக்டர் ரோல்களிலும் கதநாயகியாகவும் 70 படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இஸ்லாத்துக்கு மதம் மாறியிருக்கும் மோனிகா, இனிமேல் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசும்போது,‘பணத்திற்காகவோ காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன். எனது திருமணம் பற்றிய முறையான தகவலை உரிய நேரத்தில் தெரிவிப்பேன். எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக துணையாக இருந்த என் அப்பாவிற்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். பெயர் மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் இப்போது என் பெயர் எம். ஜி. ரஹீமா (மாருதி ராஜ் , கிரேஸி ரஹீமா)’ என்று தெரிவித்தார்.