சினிமா, Uncategorized

ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை தணிக்கை சான்றிதழ் வாங்கி 8 மாதங்கள் ஆகியும் ரிலீசாகவில்லை:சேரன் குமுறல்

JK Enum Nanbanin Vaazhkkai (18)‘‘நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது.’’ என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் இயக்குநர் சேரன்.

தன் ஆதங்கத்துக்கு முடிவு தேடும் விதமாக  ‘சினிமா டு ஹோம்’ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் சேரன். சினிமா வெளியாக அதே நாளில் டிவிடி, டிடிஎச், இணையதளம் என மற்ற ஊடகங்களிலும் சினிம வெளியாகும் என்பதே சினிமா டு ஹோம்.

‘‘சிறிய திரைப்படங்களை குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு அதே நாளில் மற்ற தளங்களில் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே “சினிமா டு ஹோம்’ நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத் தளமாக இயங்கும். தரமான படங்களை இந்நிறுவனத்தின் மூலம் வெளியே கொண்டு வருவோம். தவறான முறையில் படங்களை பதிவிறக்கம் செய்வோர், பதிவு செய்வோர் ஆகியோரைக் கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம். இதில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள்’’ என்கிறார் சேரன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s