அரசியல், தமிழ்நாடு

சுப. உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டு: அரசிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்கிறது

spUஅணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தி இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதாக மத்திய உளவு நிறுவனமான இன்டெலிஜென்ஸ் பீரோவின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானது.
உதயகுமார் குற்றம் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக ரகசிய அறிக்கை என்ற பெயரில் ஒரு அவதூறுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்றும் மத்திய உளவுத்துறை சேகரிக்கும் தகவல்களை உரிய அனுமதியின்றி வெளியிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இந்த ரகசிய தகவலை கசியவிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் இல்லாத நிலையில் மேற்கூறப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா, வழக்கை விசாரணைக்கு உகந்தது என்று அனுமதித்து வரும் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.