இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான காந்தி அமைதி விருது, சிப்கோ இயக்கத்தைத் தொடங்கிய சூழலியல் போராளி ஸ்ரீ சாண்டி பிரசாத் பட்டுக்கு வழங்கப்பட்டது. 2013ம் ஆண்டுக்கான இந்த விருதை இன்று வழங்கினார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கோபேஸ்வர் என்ற இடத்தில் பிறந்த சாண்டி பிரசாத், தன் கிராம மக்களின் சுகாதாரம், கல்வி, வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து தன் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்தார். சர்வோத சங்கத்தில் இணைந்து கொண்டதன் மூலம் காந்தியக் கொள்கைகளை அவர் சுவீகரித்துக் கொண்டார். 1973ல் சிப்கோ இயக்கத்தை தொடங்கி, காடுகளை அழிவிலிருந்து காக்கவும் மலைவாழ் மக்களின் உரிமைக்காகவும் காந்திய வழியில் போராடினார்.
காடுகளை அழிப்பை தடுக்கும் பொருட்டு மரங்களை கட்டியணைத்து போராடியது சாண்டி பிரசாத் தலைமையிலான சிப்கோ இயக்கம்.