ஆபத்துகால சேவை (எமர்ஜென்ஸி கேர்) குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு 108 ஆம்புலன்ஸ் இயக்கி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டு கால படிப்பான இதில், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படும். இந்தப் படிப்பில் செயல்முறை வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி), பி.பார்ம் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இது முழுநேர படிப்பு.
மேலும் விவரங்களுக்கு:
ஜிவிகே இஎம்ஆர்ஐ கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை,
திருவல்லிக்கேணி,
சென்னை-5
தொலைபேசி: 044- 2888 8060
இணையதளம்: www.emri.in