தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
“தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை” இல் 2 கருத்துகள் உள்ளன