தேவையானவை:
இஞ்சி – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
வெல்லம் (பொடித்தது) – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எப்படி செய்வது?
இஞ்சியை மண் போகக் கழுவி தோல் சீவுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து, இஞ்சியை சேருங்கள். இஞ்சி நன்கு வதங்கியதும் புளி, தேங்காய், உப்பு சேர்த்து சிறிது வதக்கி இறக்கி, வெல்லம் சேர்த்து கரகரப்பாக அரையுங்கள். காரமும் இனிப்பும் கலந்த கலக்கலான அயிட்டம் இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். தயிர்சாதத்துக்கும் சூப்பர் ஜோடி, இந்த அல்லம் பச்சடி!