தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன்வள விரிவாக்கத் துறை மூலமாக ‘வளங்குன்றா இறால் வளர்ப்பு பண்ணை மற்றும் உற்பத்திக்கான சிறந்த மேலாண்மை முறைகள்’ என்ற பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் இறால் வளர்ப்போர், இறால் பண்ணையில் பணிபுரிவோர், இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ள வேலையற்ற ஊரக இளைஞர்கள் போன்றோர் பங்கு பெறலாம். இந்த இறால் வளர்ப்பு பயிற்சியில் வளங்குன்றா இறால் வளர்ப்புக்கான சிறந்த மேலாண்மை முறைகள், இறால் பண்ணைக்கான இடத்தேர்வு, பண்ணை அமைப்பு மற்றும் குளங்கள் தயாரிப்பு முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட முகவரியில் அணுகலாம்.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மீன்வள விரிவாக்கத்துறை,
மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தூத்துக்குடி-628 008
மேலும் விவரங்களுக்கு
0461-2340554,
98945 30161,
94421 23115
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.