வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் காவியத்தலைவன் படத்துக்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவர் இசையமைத்த ‘வாங்க மக்கா வாங்க’ என்ற ஒரு பாடல் மட்டும் ஐட்யூனில் வெளியிடப்பட்டிருக்கிறது. கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியுள்ள இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் நாராயணன் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு மறைந்த ரகுராம் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார்.