இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி

Canara Bank logoசமீபத்தில் கனரா வங்கி பணி நியமன விண்ணப்ப படிவத்தில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி காலம், கர்ப்பமாக இருக்கிறார்களா என்று உடல்நலன் தொடர்பான விவரங்களில் கேட்டிருந்தது. இது பாலியல் வேறுபாட்டை உருவாக்குவதாகக் கூறி பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. எச்ஐவி பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கேன்சர் போன்ற நோய்கள் உள்ளதா என்ற கேள்விகளுடன் பெண்கள் எனில் உங்கள் மாதவிடாய் சுழற்சி காலம், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா போன்ற கேள்விகளும் இடம் பெற்றிருந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கர்ப்பமாக இருப்பது தகுதிக்கு குறைவானதாக எடுத்துக் கொள்வதோடு,பணியும் தரப்படமாட்டது என்று சொல்லப்படுகிறது.
‘நவீன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளால் இதுபோன்ற கண்டனத்துக்குரிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது பெண்களை ஒடுக்கும் நடவடிக்கை. சட்டப்படி இது குற்றம்’ என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த கேள்விகளை திரும்பப் பெற்றது கனரா வங்கி. வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிறைய வங்கிகள் இதுபோன்ற கேள்விகளை பணி நியமனத்தின்போது கேட்கின்றன. இருந்தும் சிலரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததால் இந்தக் கேள்விகளை திரும்பப் பெறுகிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
‘போன பத்தாண்டுகளுக்கு முன்புவரைகூட மாதவிடாய் காரணம் காட்டி பெண்களை இருட்டுக்குள் தள்ளிய அவலம் நடந்தேறியது. இன்றைய உலகமகா கார்ப்பொரேட் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் நவீனமயமாக்கிய கேள்விகள் தயாரித்து பெண்களை மீண்டும் வீட்டுக்குள் பூட்ட முயற்சிக்கிறார்கள்’ என்று எந்த பெண்ணியவாதியும் இதுவரை கோபப்படவில்லை.
பின்குறிப்பு: இதைப் படிக்கும் பெண்கள் எவரேனும் கனரா வங்கியில் கணக்கு வைத்திருந்தால் அதை மூடும்படி நான்குபெண்கள் தளம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

Advertisements

1 thought on “பணி விண்ணப்பப் படிவத்தில் மாதவிடாய் சுழற்சி பற்றி கேட்ட கனரா வங்கி”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s