அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

பட்ஜெட் 2014: அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்பு கம்பளம்!

bdget 2014தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். மக்களவையில் மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய உரையில் புதிய அரசு எதிர்கொண்டுள்ள பல்வேறு பொருளாதார சிக்கல்கள் பற்றி பேசினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாகவும் பருவமழை பொய்த்து விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் அறிவிப்பில் சில துளிகள்

 • பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறை மற்றும் காப்பீட்டுத் துறைகளில் 49 சதவிகிதத்துக்கு நேரடி அந்நிய முதலீடு அதிகரிப்பு. பல்வேறு துறைகளில் அந்நிய முதலீடு மூலம் கூடுதல் நிதி திரட்டப்படும்.
 • நவீன நகரங்களை உருவாக்க ரூ.7,060 கோடி நிதி ஒதுக்கப்படும்.
 • இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
 • இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.
 • 24 மணி நேரமும் மின் வசதி என்பதே மத்திய அரசின் இலக்கு.
 • சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் இ – விசா சேவை அறிமுகம். இந்த இ-விசா சேவை இன்னும் 6 மாதங்களில் செயல்படுத்தப்படும்.
 • பெண்கள் பாதுகாப்புக்காக உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்படும்.
 • மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டம் ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு.
 • பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ரூபாய் நோட்டுக்களில் பிரெய்லி முறை அறிமுகம்.
 • இந்தியாவில் மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், பூர்வாஞ்சள் ஆகிய மாநிலங்களில் முதல் கட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவக்கப்படும். படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வரப்படும்.
 • தேசிய குடிநீர் திட்டத்துக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு.
 • 5 ஐஐடிக்கள் மற்றும் 5 ஐஐஎம்கள் புதிதாக உருவாக்கப்படும்.
 • கிராமங்கள் அனைத்தும் பிராட் பேண்ட் மூலமாக இணைக்கப்படும்.
 • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ரூ.50,047 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • குறைந்த செலவில் வீடுகளை கட்டும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு.
 • மதராசாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.