விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து செந்திலிடம் கேட்டபோது திருமணம் நடந்தது உண்மை தான் என்று அறிவித்துள்ளார்.சென்ற புதன்கிழமை திருப்பதியில் இவர்களுடைய திருமணம் நடந்திருக்கிறது.
கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்நிலையில் இருவருக்கும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்போது காதல் ஏற்பட்டதாகவும் பெற்றோர் சம்மததுடன் தற்போது திருமணம் நடந்ததாகவும் செந்தில் தெரிவிக்கிறார்.