சினிமா, நடிகர்கள்

என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

This slideshow requires JavaScript.

தெலுங்கு நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், திருமணம் ஆகிவிட்டது, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார், தமிழ் படங்களில் நடிக்கத்தடை, தோலில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று நடிகை அஞ்சலியைச் சுற்றி ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள்… ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயம் ரவியுடன் கிராமத்துப் பெண்ணாக சாலிக்கிராமத்தில் உள்ள படத்தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அஞ்சலிக்கு இதையெல்லாம் துடைத்தெறியும் மனப்பக்குவம் நிச்சயம் வந்திருக்கும். நம்மிடம் பேசிய அவர், ‘என்னைப் பற்றிய வதந்திகள் பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானவர் என் சித்திதான். என் வேலையை நான் நேசிக்கிறேன். 2 ஆண்டு இடைவெளிக்குபிறகு இப்போதுதான் தமிழ்படத்தில் நடிக்கிறேன்.  தெலுங்கில் நான் நடித்திருக்கும் த்ரில்லர் படமான புஷ்பாஞ்சலி வெளியாகப் போகிறது. என் வாழ்வில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் நிச்சயம் ரசிகர்களிடம் சொல்வேன். இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்கள் கொடுத்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.
ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார், லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.