சமையல் நுட்பங்கள்!
பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்…
- பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும்.
- பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை கப் இருந்தால் போதும்.
- அரிசியை வறுத்தாலும் வறுக்கவில்லை என்றாலும் இதே அளவு தண்ணீர்தான்.
- குக்கரில் வைப்பதாக இருந்தால், மேற்சொன்ன அளவில் தண்ணீர் வைத்து, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்கினால், பிரியாணி உதிர் உதிராக இருக்கும்.
‘தம்’ போட்டு செய்வதானாலும் இதே அளவு தண்ணீரை சேர்க்கலாம். - பிரியாணி செய்வதற்கு வதக்கும் தக்காளி, வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது ஆகியவற்றின் தொக்கு சற்று தளதளவென்றிருந்தால் தண்ணீரின் அளவை சிறிது குறைத்துக் கொள்ளலாம்.