அரசியல், தமிழகம், தமிழ்நாடு

இன்னுமொரு கட்டட விபத்து: 11 பேர் பரிதாப சாவு

almadiதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி கிராமத்தில் தனியார் குளிர்பான கிடங்கின் சுற்றுச் சுவர் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை சுவரினை ஒட்டி அமைந்திருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்ததில், அந்தக் குடிசைகளில் தங்கியிருந்த ஒரு குழந்தை உட்பட10 கட்டடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஊருக்கு ஒதுக்குப் புறமாக தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகள் இருந்ததால் காலை 6 மணிவாக்கில்தான் ஊர் மக்களுக்கு இந்த விபத்து நடந்திருப்பது தெரிந்திருக்கிறது. இது பற்றி கிராமத்தினர் கொடுத்த தகவலின் அரசு நிர்வாகத்தினர் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 11 பேரும் உயிரிழந்திருந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த  நாகராஜ் என்பவரை மட்டும் உயிருடன் மீட்புக்குழு காப்பாற்றியது. தற்போது மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்கள் அனைவரும் ஆந்திராவில் இருந்து பிழைப்புத் தேடி தமிழகம் வந்தவர்கள்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இந்த விபத்துக்கு காரணமான கிடங்கின் உரிமையாளர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை கட்டட விபத்து நடந்து ஒரு வாரமே ஆன நிலையில் மற்றொரு விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s