இந்திய சினிமாவின் வாழும் நாயகனாக போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் ஓய்வு இல்லாமல் தன்னுடைய 71 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் என இளம் வயது நடிகரைப் போல் பரபரப்பாகவே இருக்கிறார். தற்போது சோனி தொலைக்காட்சிக்காக யுத் என்கிற துப்பறியும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணிக்கு ஜூலை 14ம் தேதி முதல் இந்தத் தொடர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி டாக் ஷோக்களை நடத்தியிருந்தாலும் அமிதாப் தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை!
இயக்குநர் பால்கி இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் ஷமிதாப் என்கிற பாலிவுட் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சீனியர் அமிதாப். இந்தப் படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.