தமிழகம், தமிழ்நாடு, விருது

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்: சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்!

schpro

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருடம் விருது வழங்கி வருகிறது. இந்த வருடத்துக்கான விருது பெறும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள் / சுயதொழில் புரிபவர்கள்

சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர்/ நிறுவனம்

மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம்

மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள்

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/ தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு

மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம்

தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம்

சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள்

சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய குழந்தை

சிறந்த பிரெய்லி அச்சகம்

மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம்

மாற்றுத் திறனாளிகளின் அதிகார பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம்

சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் என ஆகிய 14 பிரிவுகளில் 58 தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்/நிறுவனங்கள் இதற்கான படிவங்களை www.socialjustice.nic.in என்ற இணையதளத்தில் இருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம், கே.கே. நகர், சென்னை 78 ஆகியவற்றிலிருந்தும் பெற்று தக்க இணைப்புகளுடன் வருகிற 8.7.2014க்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களின் பரிந்துரையுடன் முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், கே.கே. நகர், சென்னை 600 078 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேசிய விருதுகள் 3.12.2014 அன்று புதுடெல்லியில் வழங்கப்படவுள்ளன.

Advertisements

1 thought on “மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருதுகள்: சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s