பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க உள்ளதாக கல்கி அறக்கட்டளை அறிவித்ததுள்ளது. இது குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறங்காவலர் கி.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. பட்ட மேற்படிப்புக்கு ரூ.10,000, பட்டப் படிப்புக்கு ரூ.7,500, பாலிடெக்னிக் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.5,000 என மொத்தம் ரூ.7 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் அறிவுத்திறன் குறைபாடுடைய சிறப்புக் கல்வி பயிற்சி தேவைப்படுகிற மாணவர்கள் 5 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் ஒதுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார்.
இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உள்ளிட்ட தகல்வகளைப் பெற
நிர்வாக அறங்காவலர்,
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை,
புது எண்: 14,
நான்காவது பிரதான சாலை,
கஸ்தூர்பா நகர்,
அடையாறு,
சென்னை-600 020 என்ற முகவரிக்கு, விண்ணப்பிப்பவரின் முழு முகவரியுடன் அனுப்ப வேண்டும்.
கால அவகாசம் : ஜூலை 15க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்