ஜின்னாவின் டைரி
நாவல்
ஆசிரியர் : கீரனூர் ஜாகிர்ராஜா
2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எதிர்வெளியீடு பதிப்பகத்தைச் சேர்ந்த அனுஸ்கான்,
‘‘கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.
கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் மட்டுமே சொல்லிச்செல்பவையுமான அழகியல் கொண்டவை அவரது ஆக்கங்கள். ஆகவே அவரது நாவல்கள் எல்லாமே சிறியவை.
ஜின்னாவின் டைரி ஓர் அரசியல் நாவல் அல்ல- ஆனால் அரசியல் உடைய நாவல். அல்லாப்பிச்சை என்னும் பிச்சைக்காரரிடமான உரையாடல் வடிவம் கொண்ட இந்நாவல் ஒரேசமயம் அடித்தள மக்களின் வாழ்க்கையையும் அதனூடாக ஓடிச்செல்லும் சூஃபி மரபின் மெய்த்தேடலையும் தொட்டுச்செல்லக்கூடியது. தமிழிலக்கியத்தின் புதிய எழுத்துலகுகளில் ஒன்று கீரனூர் ஜாகீர்ராஜா உருவாக்குவது.’’ என்று தெரிவிக்கிறார்.
இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புக்கு:
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி- 642002
04259 226012
இமெயில் முகவரி: ethirveliyedu@gmail.com
எதிர் வெளியீடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம். தமிழகத்துக்குள் நூல் வாங்குவோருக்கு கூரியர் செலவு இலவசமாக தருகிறார்கள்.