இந்தியா, சினிமா, பாலிவுட்\

நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழில் வெளியான கஜினி படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தி மறுபதிப்பில் நடித்தவர் ஜியா கான். 25 வயதான ஜியா கான், தன்னுடைய மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்திகொண்டார். தற்கொலைக்கு காதல் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடைய காதலன் சுராஜ் பன்சோலியை கைது செய்தது மும்பை காவல்துறை. இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தார் அவருடைய தாயார் ரபியா கான்.

This slideshow requires JavaScript.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையில் பல ஓட்டைகள் இருப்பதாகக் கூறி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படலாம் என்கிற சூழலில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த சிபிஐ அதிகாரிகள், இதுபோன்ற ஏராளமான வழக்குகள் சிபிஐயிடம் விசாரணைக்கு உள்ளன என்றும் விசாரிக்கத்தான் போதிய அதிகாரிகள் இல்லையென்றும் தெரிவித்தனர். இதற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்த நீதிபதிகள், ‘இதுபோன்ற காரணங்களைச் சொல்வது ஏற்புடையது அல்ல, சிபிஐ யே இதுபோல காரணம் சொன்னால், மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று யாரிடம் போவார்கள்’ என்று கடிந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.