ஜூஸ் வகைகள்
ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ்.
தேவையானவை:
பப்பாளி பழ துண்டுகள் – ஒரு கப்
ஆரஞ்சு – 1
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
சர்க்கரை – தேவையான அளவு
புதினா இலைகள் – 6
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை.
எப்படி செய்வது?
ஆரஞ்சு பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, பப்பாளி பழ துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிளகுத்தூள், புதினா தூவி, குளிர வைத்து பரிமாறவும்.