தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுவழங்கிவருகிறது. இதன்வழி 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு பெறுபவர் அ. வெண்ணிலா நூல்: பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும்
கே. பி. பாலச்சந்தர் நினைவு நாவலுக்கான பரிசு பெறுபவர் இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா பெய்யீத் படைப்பு உம்மத்.
அமரர் செல்வன் கார்க்கி நினைவு கவிதை நூலுக்கான பரிசுபெறுபவர் இரா. விநோத்– படைப்பு: தோட்டக்காட்டீ
எழுத்தாளர் சு. சமுத்திரம் நினைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படைப்புக்குரிய பரிசு பெறுபவர் பத்மபாரதி. படைப்பு: திருநங்கையர்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவாக வழங்கப்படும் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் இரா. வெங்கடேசன்; படைப்பு: மொழிக்கல்வியும் இலக்கண உருவாக்கமும்.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவு மொழியாக்க நூலுக்கான பரிசு பெறுபவர் ஆய்வாளர் எஸ். வி. ராஜதுரை; படைப்பு: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மு.சி. கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி நினைவாக வழங்கப்படும் நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெறுபவர் கூத்துக்கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தன்.
புதுச்சேரி இரா நாகசுந்தரம் நினைவாக வழங்கப்படும் கலை இலக்கிய விமர்சன நூலுக்கான பரிசு பெறுபவர் எம். சிவகுமார்; படைப்பு: சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு.

அகிலா சேதுராமன் நினைவு குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் விழியன்; படைப்பு: மாகடிகாரம்
பா. ராமச்சந்திரன் நினைவாக இரண்டு பரிசு வழங்கப்படுகிறது. குறும்படத்திற்கான பரிசுபெறுபவர் மரியா தங்கராஜ்; படைப்பு: கதவு.
ஆவணப்படத்திற்கான பரிசு பெறுபவர் கோம்மை அன்வர்; படைப்பு: யாதும்.
தமுஎகசவின் நிறுவனர்களில ஒருவரான தோழர் கே. முத்தையா நினைவாக சிறந்த தொன்மை சார் ஆய்வு நூலுக்குப்பரிசு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக வழங்கப்படும் பரிசினைப் பெறுபவர் ஆய்வாளர் சிலம்பு ந. நெல்வராசு; படைப்பு: கண்ணகி தொன்மம்.
பரிசளிப்பு விழா ஆகஸ்ட் மாதம் கோவை மற்றும் ஜூலை 19 அன்று சென்னையிலும் நடைபெறுகிறது என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் இதனைத் தெரிவித்துள்ளனர்.