கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற அமைப்பு வருடந்தோறும் சிறந்த தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில் இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன். இவர் சூழலியல் பற்றி மட்டுமல்லாது சினிமா தொடர்பான கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறார். தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன், தபால் துறையில் பணிபுரிந்து தலைமை தபால் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய நூல்கள் சில…

மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)
எம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)
சித்திரம் பேசுதடி, காலச்சுவடு (2004) (தொகுப்பாசிரியர்)
தமிழ் சினிமாவின் முகங்கள், கண்மணி (2004)
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, உயிர்மை (2006)
தாமரை பூத்த தடாகம், உயிர்மை (2005)
கானுறை வேங்கை, காலச்சுவடு (2006) (மொழிபெயர்ப்பு)
வானில் பறக்கும் புள்ளெலாம், சூழலியல் கட்டுரைகள், உயிர்மை (2012)
பாம்பின் கண் (தமிழ் சினிமா அறிமுகம்), கிழக்கு பதிப்பகம் (2012)
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, திரைப்படக் கட்டுரைகள், காலச்சுவடு (2014)