சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. சென்னை போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கம் பகுதியில் 11 மாடிகளை கொண்ட இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வந்தன. ப்ரைம் சிருஷ்டி என்ற தனியார் நிறுவனம், இக்கட்டடங்களை கட்டி வந்தது. சனிக்கிழமை மாலை, இரண்டு கட்டடங்களில் faith என்ற ஒரு கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தது.
விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை உயிருடன் மீட்கப்பட்ட பெண் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மாலையும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் கட்டட பணியில் ஈடுபட்ட சுமார் 50 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகக் கூடும்.