அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், ஒரு சொல் கேளீர், பெண்

சாஃப்ட் நடிகரின் கோர முகம்!

ஒரு சொல் கேளீர்

நந்தினி சண்முகசுந்தரம்

Tapas_Pal
சாஃப்ட் ஹீரோ தபஸ் பால்

சமீபத்திய நாளிதழ்களில் வட இந்திய அரசியல்வாதிகள் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது குறித்து உதிர்க்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின்றன. அந்த வரிசையில் தானும் ஆணாதிக்க இந்திய அரசியல்வாதிகளின் அடுத்த வாரிசு என்று நிரூபித்திருக்கிறார் தபஸ் பால். வங்காள சினிமாக்களில் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்தவர் தபஸ் பால். மார்க்ஸிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை அனுப்புவேன் என்று வீர முழுக்கம் இட்டாரே அவரேதான்! நடிகராக 30 ஆண்டுகள் பொழுதுபோக்கிக் கொண்டு இருந்த இவர், திடிரென்று திதி மம்தா பானர்ஜி தயவால் எம்பி ஆனார். எம்பி ஆக மக்களவையில் பதவியேற்று 30 நாட்களே ஆன நிலையில் தன் அதிகார திமிர் மூலம் திரிணாமூல் தொண்டர்களுக்கு வன்முறையும் மோசமான வழிகாட்டுதல்களையும் செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட பேச்சுக்களை பேசிய ஒருவரை கைது செய்வதே சரியான நடைமுறையாக இருக்கும். பல்வேறு கட்சிகள் தபஸ் பாலின் எம்பி பதவி பறிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறி வருகின்றன. மம்தா பானர்ஜி இது குறித்து வாயைத் திறக்கவில்லை. சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கேட்கும் போராட்டத்தில், போராட்டக்காரர்களிடையே சிக்கிக் கொண்ட மம்தா, அவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானீர்களா என்று கேட்டிருக்கிறார். ஆக, பெண் என்ற முறையில் மம்தாவுக்கே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் அப்படியோன்றும் கவலைப்படக்கூடிய விஷயமில்லை என்னும்போது அவருடைய கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு பெண்கள் மீதான பரிவு இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? குறைந்தபட்சம் அவர்கள் பெண்களை மனிதப் பிறவிகளாக மதிக்கிறார்களா என்பதே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

mp-tapas-pal
மனைவியுடன் தபஸ் பால்

தேர்தல் பிரச்சாரத்திலேயே பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து சொன்ன தபஸ் பாலுக்கு அவருடைய தங்கை மன்னிப்பு கேட்டார். இப்போது அவருடைய மனைவி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அடுத்து அவருடைய மகள் இருக்கிறார், அவரும் மன்னிப்பு கேட்பார். இவரைச் சுற்றிப்பாருங்கள் எத்தனை பெண்கள். அத்தனை பேரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கும் தபஸ் பாலிடம் கேட்க வேண்டும்!

இப்போதைக்கு அவருடைய எம்பி பதவி காப்பாற்றப் பட்டுவிட்டது. அவர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. இனியும் அவர் இதுப்போன்ற பலாத்கார வீர உரைகளை ஆற்றலாம். அவர் வீட்டுப் பெண்கள் மன்னிப்புக் கேட்பார்கள். எதிர்கட்சிகள் கசக்கிப் பிழிந்தால் அவரும் மன்னிப்பு கேட்பார். ஆனால் இன, மத, சாதி பேதங்களைக் கடந்து மக்களுக்கு தொண்டாற்றவே ஜனநாயகப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று சொல்கிற அரசியல் சாசனம். அதை தூக்கி குப்பையில் எறிகிற தபஸ் பால் போன்றவர்களை நம்பி மக்களவையில் சக பெண் எம்பி அமர்வதுகூட பாதுகாப்பற்றதுதான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s