மக்கள் முன்
நந்தினி ஆனந்தன்

சென்னை 11 மாடி கட்டட விபத்து தொடர்பாக சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.
1.இந்தக் கட்டடத்தை கட்டிவந்த “பிரைம் சிருஷ்டி” நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார்?
2.ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு இந்த நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே?அந்த முக்கிய அரசியல் புள்ளி யார்?
3.இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்து விதிகளை மீறி போடப்பட்டுள்ள இரண்டு அரசாணைகளுக்கு(G.O) உத்தரவிட்டது நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சர் வைத்திலிங்கம் மட்டும் தானா?அல்லது முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதா?இந்த ஆட்சியில் முதல்வருக்குத் தெரியாமல் அமைச்சர்கள் தன்னிச்சையாக இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?
4.கட்டடத்திற்கு திட்ட அனுமதி வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) அனுமதி வழங்குவதற்கு முன் முறையான மண் பரிசோதனை உட்பட அனைத்து ஆய்வுகளையும் சட்டப்படி செய்ததா?
5.முறையான விசாரணைகள் எதுவும் நடைபெறும் முன்பே அவசர அவசரமாக முதல்வர் ஜெயலலிதா CMDA மீது தவறில்லை என்று அறிவிப்பது ஏன்?
6.ஜெயலலிதா முன்பு முதல்வராக இருந்தபோது கொடைக்கானலில் விதிகளை மீறி “பிளசண்ட் ஸ்டே ஹோட்டல்” கட்டுவதற்கு அனுமதி அளித்தது போல இந்த விவகாரத்திலும் இவருக்கு நேரடி தொடர்புள்ளதா?இதை மறைக்கவே அவசர அவசரமாக CMDAவுக்கு வக்காலத்து வாங்குகிறாரா?
7.சென்னையில் இதுபோல விதிகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து முறையான நீதிவிசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுமா?
கட்டுரையாளர் நந்தினி ஆனந்தன், சட்டம் பயிலும் மாணவி. அரசு மதுக்கடைகளை மூடக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்திவருபவர்.
CMDA எவ்வளவு ஊழல் மலிந்தது என்பது சென்னையில் வாழும் ஒவ்வொரவருக்கும் தெரியும். எடுத்த எடுப்பிலேயே CMDAவைக் காப்பாற்ற ஜெ முயல்வது எதையோ சொல்ல வருகிறது. நாராவது பலிகடா கிடைப்பார்கள் பாருங்கள்