இன்றைய முதன்மை செய்திகள்

புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் இலங்கை அகதி மரணம்: மருத்துவமனை மீது வழக்கு!

Sri-Lankan-Tamils-look-ov-001புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த சந்திரகேகரன் மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியத்தாலே இந்த மரணம் சம்பவித்ததாக அவருடைய உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இன்று காலை விழுப்புரம் மாவட்டம், கீழ்ப்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரசேகரன் (எ) தீபன் (வயது 29) என்பவர் நெஞ்சு வலி காரணமாக ‘பிம்ஸ்’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக காலை 6 மணிக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அப்போது அங்குப் பணியிலிருந்த மருத்துவர் ஒருவரும், செவிலியர்களும் ரூ. 5000 பணம் கட்டும்படியும், அப்போதுதான் சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறியுள்ளனர். முகாமிலிருந்து உடன் சென்றவர்கள் தாங்கள் பணம் கட்டுவதாகவும், சிகிச்சை அளியுங்கள் என மன்றாடியும் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

நெஞ்சு வலி உள்ளதால் ஈ.சி.ஜி, எடுத்துப் பாருங்கள் எனக் கெஞ்சியும் அலட்சியமாக இருந்துள்ளனர். தொடர்ந்து வலியுறுத்தவே ஒரு மணி நேரம் கழித்து ஒரு ஊசிப் போட்டுள்ளனர். அப்போது 7.15 மணியளவில் சந்திரசேகரனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவ்விடத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. உடனே மருத்துவமனை வாசலில் நூற்றுக்கணக்கான முகாமைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ஒன்றுகூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ. சுகுமாறன் வெளியிட்ட அறிவிப்பில், ‘’இளைஞரின் மரணம் பற்றி செய்தி கிடைத்ததும் நானும், சக அமைப்புத் தலைவர்களும் ‘பிம்ஸ்’ மருத்துவமனைக்குச் சென்றோம். பின்னர் அங்கிருந்த காவல்துறையினரிடம் மருத்துவம் அளிக்காத மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது வழக்குப் பதிவுச் செய்யும்படி வலியுறுத்தினோம். பின்னர் புதுச்சேரி காலாப்பட்டு காவல்நிலைய அதிகாரிகளிடம் எழுத்து மூலம் புகார் அளித்தோம். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுச் செய்து உடலைக் கைப்பற்றி புதுச்சேரி அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைத்துள்ளனர்.

நாளை காலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, பின்னர் நாங்கள் கேட்டுக் கொண்டபடி மருத்துவர் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யவும், வீடியோ மூலம் பதிவுச் செய்யவும் உள்ளனர். காலையில் இருந்து மதியம் வரையில் விடாது முயன்று இதைச் செய்துள்ளோம். அகதிகளாக மிகுந்த துயரங்களுடன் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இந்த இறப்பு கடும் அதிர்ச்சி அளித்துள்ளதைக் காண முடிந்தது. வந்திருந்த முகாம் மக்கள் வெடித்து அழுதக் காட்சி துயரத்தைக் கூட்டியது. மீண்டும் நாளை காலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முன்பு அனைத்து அமைப்புத் தலைவர்களும் ஒன்றுகூடும் முடிவுடன் கலைந்தோம். ‘பிம்ஸ்’ தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்று நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. மரணமடைந்த ஈழத்தமிழ் இளைஞனுக்கு நீதிக் கிடைக்கப் போராடுவோம்.’’ என்று தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.