ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை சிம்ரன் நடுவராக இருக்கும் டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்க சென்னையில் தேர்வு நடைபெறுகிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் நாளை ஆடிஷன் நடக்க இருக்கிறது. காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த தேர்வில் நடனத்தில் விருப்பமுள்ள 14 வயதுக்கு குறைவான சிறுவர்கள் கலந்து கொள்ளலாம்.