செய்திகளில் பெண்கள், பெண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பெண் போலீஸார்!

women policeசெய்திகளில் பெண்கள்

குஜராத் மாநில போலீஸ் நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக காவல்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பெண் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த பெண் போலீஸாரில் 7-ல் ஒரு பகுதியினர் தமிழகத்தில் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள 1012 பெண் காவல் ஆய்வாளர்களில் 246 பேர் தமிழகத்தில் உள்ளனர். தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கும் திட்டம் 1992-ஆம் திட்டமிடப்பட்டது. இப்போது தமிழகத்தில் பெண்களின் பிரச்னைகளை தீர்க்க 199 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல்நிலையங்களில் 40 சதவீத காவல்நிலையங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மேலும் அனைத்து காவல்நிலையங்களிலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் 2 பெண் காவலர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் காவல்துறை எஸ்.பி.க்களாக பெண்கள் உள்ளனர்.

இப்போது பெண் போலீஸார் பெண்கள் தொடர்பான பிரச்னைகளை மட்டும் கையாளாமல், ஆண்களை போல மற்ற வழக்குகளையும் கையாளுகிறார்கள். காவல்நிலையங்களின் தினசரி மேலாண்மையை பெண் போலீஸார் கவனிக்கின்றனர். மேலும் தொழில்நுட்ப சேவையிலும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் காவல்துறையின் தகவல் தொடர்பையும் பெண் போலீஸாரே பராமரிக்கின்றனர். அதேபோல, தமிழகத்தில் உள்ள 30 சதவீத கைரேகை நிபுணர்கள் பெண்கள் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s