சினிமா, பெண், பெண் எழுத்தாளர்

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் எழுத்தாளர் குட்டி ரேவதி!

kutty revathy

எழுத்தாளர் குட்டி ரேவதி விறலி விடு தூது என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவன தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்…
பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, ‘விறலி விடு தூது’ என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்கதை எழுதும் கலைஞர்களைக் கண்டறியவும் இந்நிறுவனம் பாடுபடும். ஒரு வரிக்கதை உள்ளவர்கள், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள், திரைக்கதை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும். viralividuthoodhu@gmail.com
‘விறலி’ என்றால் கலைகளை வளர்ப்பவள் என்பது பொருள்.

எழுத்தாளர் குட்டி ரேவதி மரியான் படத்தின் மூலம் பாடலாசிரியராக சினிமாத்துறையில் பணியாற்ற தொடங்கினார்.

Advertisements

1 thought on “சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் எழுத்தாளர் குட்டி ரேவதி!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s