சினிமா

அஞ்சலி – இயக்குநர் ராம நாராயணன்

அஞ்சலி

ராம நாராயணன்

பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணன், உடல்நலக் குறைவால் சிங்கப்பூரில் காலமானார். 66 வயதான அவர், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகம், நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம நாராயணன் நேற்றிரவு இறந்தார்.
காரைக்குடியைச் சேர்ந்த ராம நாராயணன் சுமை என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ‘சிவப்புமல்லி’, ‘இது எங்க நாடு’, ‘கரிமேடு கரிவாயன்’, ‘காவல் கைதிகள்’, ‘குற்றவாளிகள்’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘ஆடிவெள்ளி’, ‘துர்கா’, ‘தைப்பூசம்’, ‘பாளையத்து அம்மன்’, ‘ராஜகாளியம்மன்’, ‘நாகேஸ்வரி’ போன்றவை இவர் இயக்கிய சில படங்கள். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, மலாய் உள்ளிட்ட 9 மொழிகளில் 128 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். நாய், குரங்கு, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை வைத்து அவர் எடுத்த பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. கடந்த ஆண்டு வெளியான ஆர்யா சூர்யா திரைப்படம் இவர் இயக்கத்தில் வெளியான கடைசி படமாகும். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். காரைக்குடி தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினராகவும் ராம நாராயணன் பதவி வகித்துள்ளார்.

Advertisements

1 thought on “அஞ்சலி – இயக்குநர் ராம நாராயணன்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s