கல்வி வேலைவாய்ப்பு
கல்விக் கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகள்
கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சில வங்கி மேலாளர்கள் விண்ணப்பப் படிவத்தைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள். போராடி விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்தால் வாங்கி அப்படியே வைத்துக் கொள்வார்கள். சில மேலாளர்கள் சொத்துப்பிணை தருபவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார்கள். 4 லட்சம் வரை கல்விக்கடன் தர பரிந்துரையோ, பிணையோ தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. கல்விக்கடன் என்பது மாணவர்களின் உரிமை. விண்ணப்பத்தை நிராகரிக்க வங்கி மேலாளருக்கு உரிமையில்லை.
கல்விக்கடன் தர மறுத்தாலோ, விண்ணப்பத்தை நிராகரித்தாலோ இந்தியன் குரல் அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளலாம். இவர்கள் சட்டப்பூர்வமாக கல்விக்கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லித் தருவார்கள்.
பாலசுப்பிரமணியன் – 9444305581
தம்பி தீபக்கை – 9994658672