கல்வி – வேலைவாய்ப்பு
மழலையர் பள்ளிகள் அதிகமாகிவிட்ட நிலையில் அவற்றில் பணியாற்ற பெண்களுக்கு பிரத்யேக பணி வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கென தனியார் நிறுவனங்கள் சில சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. அரசு கல்வி நிறுவனங்களில் படித்தால் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. அந்தவகையில் மத்திய அரசு தேசிய திறந்தவெளி நிறுவனம் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி சான்றிதழ் வகுப்பு நடத்தி வருகிறது.
கல்வி திட்டத்தை புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் லாஸ்பேட்டையில் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.
சேர்க்கை முறை : பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் புதுவை அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைமுறையில் உள்ள மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு நடைபெறும்.
படிப்பு காலம்: ஓராண்டு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : சான்றிதழ் படிப்பில் சேர விரும்புவோர், புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வரும் 15-ம் தேதி வரை ரூ.10 செலுத்தி விண்ணப்பம் பெறலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பயிற்சி நிறுவனத்தில் அளிக்க வேண்டும்.