ஆரோக்கியம், சரும சிகிச்சை, சித்த மருத்துவம், சீசன் பிரச்னைகள், பராமரிப்பு குறிப்புகள், பாரம்பரியம், மருத்துவம்

சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்

பாரம்பரிய மருத்துவம்

மருத்துவர் கு. சிவராமன்

Dr. Siva Raman

நீரின்றி அமையாது உலகு என்றால்; சூரிய ஒளியின்றி அமையாது பிரபஞ்சம் எனலாம். சூரியனில் இருந்து சரியான தூரத்தில் வெடித்து உமிழப்பட்ட கோளம் என்பதால் தான் பூமியில் மட்டும் நீங்களும் நானும் மற்ற கோளங்களில் உயிர் இல்லை என்பதற்கு உயிர்வாழ்வதற்கு ஏதுவான சரியான வெப்ப அளவு பூமியில் மட்டும் இருப்பதுதான் காரணம். பெரும்பாலான உயிர்கள் சூரியனைச் சார்ந்தே வாழ்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சூரியன் உதிக்கும் போது தானும் எழுந்து இரையும் இன்ன பிறவும் தேடி, சூரியன் அடையும் போது கூட்டுக்குள் அடையும். மின்சாரமும் டீசலும் வராதிருந்தால் நாமும் அப்படித்தான் இருந்திருப்போம்.

சிர்கார்டியன் ரிதம் என்று, நம் உடம்புக்குள் ஓடும் கடிகாரம் ஒன்று உண்டு. பயலாஜிகல் கிளாக் என்று சொல்லப்படும் இந்த கடிகாரம், அதிகாலையில் இருந்து நடு இரவு வரை நம் பணிகளுக்கேற்றவாறு நம் உடலை அதன் இயங்கியலை சரியாக கண்காணித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். சூரிய ஒளி இருக்கும் போது என்ன சுரக்க வேண்டும்? இரவில் எதைச் சுரக்க வேண்டும் என்றெல்லாம் உடல் இந்த கடிகாரம் மூலம்தான் திட்டமிடுகிறதாம். இரவில் சூரியனில்லாத போது மட்டும் சுரக்கும் மெலடோனின் மூலம், நம் தூக்கத்தில் பகலில் நடந்த உடலின் உள்காயங்களை ஆற்றும் அற்புத பணியை இந்த மெலடோனின் செய்கிறதாம். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க கான்சர் வராதிருக்க இந்த சூரிய ஒளி இல்லாதபோது இரவில் சுரக்கும் மெலடோனின் அவசியம் என்கிறது நவீன விஞ்ஞானம்.. இந்த மெலடோனின் சூரிய வெளிச்சம் உள்ளபோது செய்யும் பகல் தூக்கத்தில் வராதாம். அமெரிக்க கம்பெனியின் அரைக்கால் சட்டை விற்க, கூட நம்ம ஊரில்  நடுராத்திரியில் கம்ப்யூட்டர் முன், விழித்திருந்து அவுட் சோர்சிங் வேலை செய்து பகலில் தூங்கி மாற்றி வாழும் பலருக்கும், கூடுதல் சம்பளத்தில் நாம் இழந்துவருவது நமது அடிப்படை ஆரோக்கியம் என்பது தெரியாது.

சூரிய ஒளியில் மட்டும்தான் விட்டமின் டி இருக்கிறது!
சூரிய ஒளி உடம்பில் பட்டால்தான் விட்டமின் டி சாத்தியம்.. விட்டமின் டி இருந்தால், மட்டுமே  நீங்கள்  சாப்பிடும் கால்சியம் டானிக்கோ, கால்சியம் மிக்க கேவுரு கஞ்சியோ, இரண்டிலுமிருந்து கால்சியம் உள்ளே போகும். தினசரி காலை வெயில் உடம்பில் படும் படி கொஞ்சம் வேக நடை செய்யுங்கள். வெயிலில் போகும் போது சன் ஸ்கிரீனை அள்ளித் தேய்த்து முட்டாளாய் திரியாதீர்கள். அதிகபட்ச வீரியமுள்ள சன்ஸ்கிரீனர் கலர் தராது. வியாதி தரும். விட்டமின் – டி வருவதை அது தடுக்குமாம்.
சூரியனின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் நம் முன்னோர்கள். யோகாசனப் பயிற்சியில் சூரிய நமஸ்கார் எனும் பயிற்சியை வைத்து துவங்கி சூரியனை வழிபடச் சொன்னது அந்த ஒளியின் முக்கியத்துவம் உணர்ந்துதான். காலையில் உடலை வளைத்து செய்யப்படும் இந்த பயிற்சியில், உடல் மற்றும் மனம் முழு ஓவர்-ஆயில் செய்யப்படும் என்பது இன்றைய ஆய்வு முடிவு.

SUK_8417

சன்ஸ்கிரீன் லோஷன் போடலாமா?

அதிக சூரிய ஒளி உடம்பில் பட்டால் ஆகாதாமே என்போருக்கு ஒரு செய்தி. மெலனின் சத்து குறைவாக உள்ள வெள்ளைத்தோலுடைய ஆங்கிலேயருக்கு, அது சரி.. இணையத்தில்  UV  INDEX  பார்த்து அன்றையதினம் UV INDEX அளவு மூன்றுக்குள் இருந்தால் மட்டுமே சன் ஸ்கிரீன் போடாமல் வெளியே போகலாம் என்ற சித்தாந்தமெல்லாம் நமக்கில்லை தோழி. ஐரோப்பிய பெண்ணுக்கு மட்டும் தான். ஆரோக்கியமான நம் கருப்புத் தோலுக்கு சூரிய ஒளி நன்மை தருமே தவிர தீமை தராது.

காலையில் ஏன் குளிக்க வேண்டும்?

காலையில் நாம் ஏன் குளிக்கிறோம் தெரியுமா? அழுக்குத்தீர என்றால் எல்லோரும் பணி முடிந்த பின்பு வீட்டுக்கு வந்து மாலையில் தான் குளிக்க வேண்டும்.பின் ஏன் காலையில் குளிக்கிறோம். இரவில் சந்திரன் ஆட்சி. சந்திரனின் குளிர்ச்சியில் உடல் குளிர்ந்திடாதிருக்க உடல் வெம்மையாக மாறி இருக்கும். காலை சூரியோதையத்தில் மீண்டும் உலகம் சூடாக துவங்கும் சமயம் நாம் தலைக்கு குளித்தால்தான், உடலின் வெம்மை குறைந்து, பகலில் உடல் குளிர்ச்சியாயிருக்க உதவும். இந்த சங்கதி தெரியாமல்,  ‘தலைக்கா..வாரத்துக்கு ஒருவாட்டிதான் குளிப்பேன் என்பவர்கள்; நான் நைட்ல தான் ஷவர் பண்ணிப்பேன்’ என்பவர்கள் சொந்த செலவில் சூனியம் வைப்பவர்கள். நல்ல ஆரோக்கியம் வேண்டுபவர்கள்,அதிகாலை தலைக்கு குளியுங்கள். ஸைனசைடிஸ் உள்ளவர்கள் சித்த மருத்துவரைப் பார்த்து உங்கள் உடலுக்கேற்ற தைலம் வாங்கித்தேய்த்து குளியுங்கள்.

மருத்துவர் சிவராமன் பிரபல சித்த மருத்துவர். பாரம்பரிய மருத்துவமுறை குறித்தும் நவீன நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவம் குறித்தும் முன்னணி இதழ்களில் கட்டுரை எழுதி வருகிறார். பல்வேறு நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.

தொடர்புக்கு…

Arogya Healthcare Pvt Ltd.
A-2 Alankar Plaza
425, Kilpauk Garden Road
Chennai – 600 010
India.
Tel: +91-44-26461455 / 26601562
E-mail : herbsiddha@gmail.com,siva@arogyahealthcare.com

Arogya Siddha Hospital 
B-7, Mugappair East Industrial Estate, 1st Main Road,
Mugappair Eri Scheme, Mugappair East,
Chennai – 600037.
Ph: 044 43550990

“சுட்டெரிக்கும் வெயிலால் நமக்கென்ன பயன்? விளக்கம் தருகிறார் டாக்டர் சிவராமன்” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.