என்ன படிக்கலாம்?
இசை தொடர்பான படிப்புகளைப் படிப்பதற்கு நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள் எங்கே அளிக்கிறார்கள் என்பது குறித்து தெரிவதில்லை. குறிப்பாக தமிழக அரசு நடத்துக் இசைப்பள்ளிகள் பல்வேறு சலுகைகளுடன் இசைக் கல்வி தருகின்றன.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
என்னென்ன பிரிவுகளில் பயிற்சி?அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தகுதி : குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பிரிவுகளில் சேருவதற்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஏனைய படிப்புகளுக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
வயது வரம்பு : 13 முதல் 25 வயது வரை இருப்பவர்கள் விண்ணபிக்கலாம்.
தங்கும் வசதி: இசைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விடுதி வசதி, இலவச பேருந்து பயணஅட்டை வழங்கப்படுகிறது.
உதவித் தொகை உண்டு : தமிழக அரசு அறிவித்துள்ளபடி இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.400 வீதம் வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூர் புதுப்பாளையத்தில் இருக்கும் அரசு இசைப் பள்ளியில் தொடர்புகொள்ளலாம்.
2014-15ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.