வேலைவாய்ப்பு
இன்றைய நவீன வாழ்க்கை சூழல் பல்வேறு புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகமாக உள்ளன. அந்த வகையில் பிட்டர், வெல்டிங், குளிர்சாதனப் பெட்டி பழுது பார்த்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட துறைகள் உள்ள சுயதொழில் வாய்ப்புகள் குறித்த கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. புதிய தலைமுறை அறக்கட்டளை நடத்தும் சுயதொழில்-2014 கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜூன் 27 மற்றும் 28-ம் தேதி, சென்னை கிண்டி ஐடிஐ வளாகத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன்பதிவு அவசியம்.
மேலும் தகவல்களுக்கு
87544 17500
87544 17308
87544 17338
044 – 28341219 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.