நடிகர் பார்த்திபன் இயக்கிவரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம், கதையே இல்லாமல் ஒரு சினிமா என்பதை ஒரு வரி செய்தியாகக் கொண்டு தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, அமலா பால், விஷால், சிவகார்த்தியேயன், தாப்ஸி, விஜய் சேதுபதி உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். பல படங்களை இயக்கி அதில் தானும் நடித்திருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.
அல்போன்ஸ் ஜோசப், தமன், விஜய் ஆண்டனி, ஷரத் என நான்கு இசையமைப்பாளர்கள் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.
“கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!” இல் ஒரு கருத்து உள்ளது