எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, தையல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

எம்பிராய்டரி போடுவோம் – 1

ஓட்டுத்தையல்(Running stich)

மனிதர்கள் நாகரிகமாக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலை தோன்றியது. அதாவது இலைகளையும் தழைகளையும் மரப்பட்டைகளையும் கோர்த்து உடைகள் தயாரித்தபோது முதல் தையல் கலைஞன் தோன்றியிருக்கக்கூடும். மிக மிக பழமையான இந்தத் தையல் கலையில் இப்போது எவ்வளவோ மாற்றங்கள். ஆனாலும் கையால் தைக்கப்படும் தையலுக்கு இப்போதும் தனி மகத்துவம் உண்டு. இப்படியோரு மகத்துவமான தையல் கலையில் உள்ள ஏராளமான தையல் வகைகள் பற்றி அறிவதோடு, அதைக் கற்கவும் போகிறோம். எம்பிராய்டரி மூலம் வீட்டிலிருந்தபடியே அல்லது அதையே முழுநேர தொழிலாக செய்வது குறித்த ஆலோசனைகளையும் வழங்கவிருக்கிறோம். வாருங்கள் எம்பிராய்டரி கற்போம்….

எம்பிராய்டரியில் நூற்றுக்கணக்கான வகை உண்டு. ஒவ்வொரு வகையுமே ஒவ்வொரு விதத்தில் அழகு. இங்கு நீங்கள் தெரிந்து கொள்கிற தையலை உடனடியாக ஒருமுறை தைத்துப் பார்த்துவிட்டால், தைக்கும் முறை நன்கு மனதில் பதியும். காட்டன் துணிகளில் முதலில் தைக்கப் பழகுங்கள். நன்கு பழக்கத்துக்கு வந்தபிறகு, உங்கள் ஆடையில் விருப்பமான பூவேலையைச் செய்யலாம். இந்தப் பகுதியில் முதலில் எம்பபிராய்டரியின் அடிப்படையான ஓட்டுத் தையலில் இருந்து தொடங்குவோம்.

எம்பிராய்டரி போடத் தேவையானவை:
எம்பிராய்டரி சட்டகம், ஊசி, சுருக்கம் இல்லாத காட்டன் துணி, காட்டன் எம்பிராய்டரி நூல்.
எப்படிப் போடுவது?
நூலுடன் ஊசி, துணிக்குள் நுழைந்து நுழைந்து ஓடுவதால் தான் இந்தத் தையலுக்கு ‘ஓட்டுத் தையல்’ என்று பெயர். இந்தத் தையலை மிகவும் எளிதாக தைக்க முடியும். உதாரணதுக்கு இந்த பூ டிசைனை வரைந்து கொள்ளுங்கள். இதில் இரண்டு வகையான நூல்களைப் பயன்படுத்தப் போகிறோம். ஊசியில் ஆரஞ்சு நிற நூலை கோர்த்துக் கொள்ளுங்கள். நீளமான நுனியை முடிச்சிடுங்கள். டிசைன் ஆரம்பிக்கும் இடத்தில் கீழிருந்து குத்தி ஊசியை மேலே இழுத்துக் கொள்ளுங்கள். சிறிய இடைவெளி விட்டு, பக்கத்திலேயே குத்தி, ஊசியை கீழ்ப்புறமாக எடுங்கள். அதற்குச் சிறிது தள்ளி, ஊசியைக் குத்தி, முன்பு சொன்னதுபோலவே மேலிழுக்க வேண்டும். இப்படியே இடைவெளி விட்டுத் தைத்துக்கொண்டே போவதுதான் ஓட்டுத் தையல். தையல்களும் இடைவெளிகளும் ஒரே அளவில் இருந்தால்தான் தையல் முடிந்ததும் பூ வேலைப்பாடு சிறப்பாகத் தெரியும்.

DSCN1388
படத்தில் காட்டியதுபோல் ஆரஞ்சு நிற தையல் வர வேண்டிய இடத்தில் முதலில் அவுட் லைன் தையல் போட்டு முடித்துவிட்டு பிறகு, அதே நிற நூலில் அவுட் லைனை நிரப்புங்கள்.

DSCN1406

பூவை ஒட்டினாற்போல வரும் இலைக்கு பச்சை நிற நூலால் ஓட்டுத் தையல் போட்டு நிரப்புங்கள்.

DSCN1408
பொதுவாக கைக்குட்டை, தலையணை உறை, குழந்தையின் ஆடைகள் போன்றவற்றில்தான் ஓட்டுத் தையல் போடுவார்கள். ஆனால் எந்த கலைக்கும் எல்லை என்று எதுவும் இல்லை. எதிலும் எல்லாவற்றிலும் இந்தத் தையலைப் பயன்படுத்திப் பார்க்கலாம். உதாரணத்துக்கு  சுடிதாரிலும் புடவையிலும் உள்ள டிசைன்களின் மேலே ஓட்டுத் தையல் போட்டால்கூட அது டிசைனர் உடை போல மாற்றிவிடலாம். செய்து பார்த்துவிட்டு பகிருங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s