குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பெற்றோர் தேவை?

செல்வ களஞ்சியமே – 71

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சென்ற பத்தியில்  பார்த்த டைகர் மாம் – என்னும் ரொம்பவும் கண்டிப்பான அம்மாவின் குணாதிசயங்கள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்:

 • கோபமாக என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.
  உண்மையில் குரலை உயர்த்திப் பேசுவதனால் ஒன்றும் நடக்காது. நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாக சொல்வது பலன் தரும்.
 • குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழிக்க மாட்டார்கள்.
  குழந்தைகள் ஏதாவது கடினமான வீட்டுப்பாடங்கள், இல்லை பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றால் நீயே செய் என்று சொல்லுவார்கள்.
  இது தவறு. நீங்களும் கூடவே உட்காந்து கொண்டு அவர்கள் செய்ய உதவ வேண்டும்.
 • குழந்தைகளை சதா கண்காணித்துக் கொண்டும், அவர்கள் செய்யும் வேலைகளை குறை சொல்லிக்கொண்டும் இருப்பார்கள்.
  இது மிகவும் தவறு. இதனால் பலன் ஒன்றும் இருக்காது. உங்கள் பார்வையிலிருந்து எப்படி தப்புவது என்றே குழந்தைகள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
 • தங்கள் குழந்தையை ‘பார்த்து’க் கொள்ளுவார்கள்; அவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
  இந்தக் காலம் கனிணி யுகம். உங்கள் குழந்தை முகநூல் மற்றைய சமூக தளங்களில் பொழுது போக்குகிறார்கள் என்றால் நீங்கள் அவர்களை ‘பார்த்து’க் கொள்ளுகிறீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்று பொருள். குழந்தைகள் தாங்கள் சொல்வதை பெற்றோர்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 • டைகர் மாமின் குழந்தைகள் எப்போதும் வேலை, படிப்பு என்று ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். விளையாடுவதில்லை.
  குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது மிகவும் தேவை. படிப்பு நடுவில் விளையாடுவது அவர்கள் படிப்பில் இன்னும் நல்ல கவனம் செலுத்த உதவும்.
 • இவர்களின் குழந்தைகள் தங்கள் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் எதிரிலேயே தங்கள் குழந்தைகளை மட்டம் தட்டுவார்.

ggapp-cb235-chhota-bheem-400x400-imadwarmpbjzjzmt

இவை எல்லாமே தவறு என்றாலும், சில சமயங்களில் குழந்தைகளை கண்டிக்கத்தான் வேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் அனுமதிக்க முடியாது. கேட்பதையெல்லாம் வாங்கித் தரவும் கூடாது.

குழந்தைகள் பிற்காலத்தில் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு மிகவும் முக்கியக் காரணம் பெற்றோர்கள்தான். குழந்தை கருவில் இருக்கும்போதே இவை தீர்மானம் செய்யப்பட்டு விடுகின்றன. இரட்டையராகப் பிறந்தாலும், வேறு வேறு இடங்களில் வளரும் குழந்தைகள் வேறுபட்டு இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகள் வளர்ப்பில் அதை வளர்ப்பவர்களின் தாக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

பெற்றோர்களை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகைப் பெற்றோர்கள்: ‘நாங்கள் சொல்வதுதான் சரி’
இந்த மாதிரியான அதிகாரப் போக்குக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பல சட்ட திட்டங்களை வகுக்கிறார்கள். கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் தண்டனைதான். குழந்தைக்கு ஏன் சட்டதிட்டங்கள், ஏன் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று புரிய வைக்க இவர்கள் முயலுவதே இல்லை. நான் சொல்வதை நீ கேட்கவேண்டும்; கேள்வி கேட்காமல் என்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப் படுகிறார்கள். பெற்றோரிடம் பயம் வளருகிறதே தவிர, குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பாசம் பரிவு, புரிந்துணர்வு என்பது இல்லாமல் போகிறது. பெற்றோர்களுக்குக் கீழ் படிந்து நடந்தாலும், உணர்வு பூர்வமான உறவு இங்கு மலருவதில்லை.

இரண்டாவது வகை: தழைந்து போகும் பெற்றோர்கள்:
இந்த வகைப் பெற்றோர்கள் குழந்தைக்கு தாங்கள் நண்பர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஒழுங்கு, சட்டதிட்டங்கள் இவை பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. குழந்தைகளை போஷித்து, அவர்களுடன் நிறைய பேசி நிறைய விளையாடி – என்று இருப்பவர்கள். இது ஒருவிதமான சுதந்திரமான உறவு என்றாலும், இந்தக் குழந்தைகள் பள்ளியில் சுமாராகவே படிக்கிறார்கள்; அதேபோல சுய ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு என்பதும் இவர்களிடம் குறைவாகவே இருக்கிறது.
இங்கு மாண்டசரி கல்விமுறையை அறிமுகப்படுத்திய திருமதி மரியா அவர்களின் கூற்றை பார்க்கலாம்: ‘குழந்தைக்கு ஸ்பூனை எப்படி பிடித்துக் கொள்வது என்று சொல்லிக் கொடுக்காமல், உணவை ஊட்டிக் கொண்டு, நீயாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள் என்று சொல்லும் அம்மாவை சிறந்த அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியாது’.
ggapp-cb232-chhota-bheem-400x400-imadwap7qghdnkq2

மூன்றாவது வகை பெற்றோர்கள்:
அதிக சட்டதிட்டங்கள் போடாமல், அதிக இடமும் கொடுக்காமல் இரண்டுக்கும் நடுவில் இருப்பவர்களே இந்த மூன்றாவது வகை பெற்றோர்கள்.

 • சட்டதிட்டங்கள் போடப்பட்டாலும், அவை குழந்தைகளுடன் பேசி கலந்து ஆலோசித்து போடப்படுபவை.
  உதாரணம்: ‘பள்ளியிலிருந்து வந்தவுடன் ஒரு மணி நேரம் விளையாடு. பிறகு வந்து உன் பாடங்களை முடித்துவிட வேண்டும்’
 • ஒரு வேலை சொன்னபடி குழந்தையால் பாடங்களை முடிக்க முடியவில்லை என்றாலும் பெற்றோர்கள் கோபிப்பது இல்லை. கூடவே உட்கார்ந்து குழந்தை படிக்க உதவுகிறார்கள்.
 • இந்தவகைப் பெற்றோர்கள் கண்டிப்புடன் தங்கள் அன்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுக்கிறார்கள். குழந்தையின் நிலைமையை புரிந்து கொள்ளுகிறார்கள். தாங்கள் போடும் சட்டதிட்டங்கள் குழந்தையின் சுதந்திரத்தை முடக்காமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள். குழந்தையின் எல்லை என்ன என்பதைப் புரிந்து, குழந்தை சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.
 • சுயக் கட்டுப்பாடு என்பது குழந்தையிடம் இயல்பாக வளர உதவுகிறார்கள். தங்கள் வேலையை தாங்களாகவே முடிக்க சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள்.
 • குழந்தையின் ஒழுக்கம் நன்னடத்தை இவற்றிற்கு குழந்தையே பொறுப்பாக இருக்கும்படி செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன், பெற்றோர்களிடம் புரிந்துணர்வும், பாசமும் கொண்டு நடந்து கொள்ளுகிறார்கள்.

இப்படித்தான் பெற்றோர்கள் இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறையும் கிடையாது. ஆனால் பெற்றோர்கள் குழந்தையை நடத்தும் விதம் குழந்தைக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்குமானால் இருவருமே பயன் பெறுவார்கள்.

அடுத்த வாரம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.