சீசன் சமையல்
காமாட்சி மகாலிங்கம்

எல்லா சாதத்துடன் மாங்காய் சாதம் இதுவரை நாம் செய்யவில்லை. இந்த சீஸனில் செய்து விடலாம். மாங்காய்கள் கிடைக்கும்போது செய்தால்தானே சுலபமாக இருக்கும். கலந்த சாத வகையில் இதுவும் நன்றாக இருக்கும்.செய்வதும் சுலபம்தான். வடாம் , வற்றல்கள் பொரித்து, சாதத்தைக் கலந்தால் வேலை முடிந்தது.
வேண்டியவற்றைப் பார்க்கலாம்.
அதிக புளிப்பில்லாத மாங்காய் – 1
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு,பெருங்காயம் – சிறிதளவு
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – வகைக்கு ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
ருசிக்கு – உப்பு
மஞ்சள் பொடி – துளி
பச்சை மிளகாய் – 2
அரிசி – ஒன்றரை கப்
கொத்தமல்லியோ,கறிவேப்பிலையோ மேலே தூவ.
முந்திரி போடலாம்.
செய்முறை:
அரிசியை நல்ல உதிர், உதிர் பதமாக சாதம் செய்து ஆற வைக்கவும். மாங்காயைத் தோல் சீவிக், கொப்பறைத் துருவியில்த் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,கடுகு,பெருங்காயத்தைப் பொரித்து,பருப்புகளைச் சேர்த்து சிவக்க வறுத்து, மிளகாயையும் வதக்கி, மாங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
தீயை சிம்மில் வைத்துக் கிளறிக் கொடுக்கவும், மிகச் சிறிய அளவில் உப்பு, மஞ்சள் சேர்த்துச் சுருள வதக்கவும். குறைந்த தீயில் நன்றாக வதங்கும். ஆற வைத்த சாதத்தில் திட்டமாக உப்பு சேர்த்து, மாங்காய்க் கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பச்சைக் கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
ருசியான சாதம் தயார்.
சிறந்த பகிர்வு
மிக்க நன்றி. அன்புடன்