கோலிவுட், சினிமா

கோலிவுட்டில் இது த்ரில்லர் காலம்!

Nirmal (3)

இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன; வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் ‘8 m m’.மலேசியத் தமிழ் இயக்குநர் அமீன் இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய்,தமிழ் மொழிகளில் 12 படங்கள் இயக்கியுள்ளவர்.

மைண்ட் ஸ்க்ரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘8எம்.எம்’ மை தயாரிப்பவர் ஜெயராதாகிருஷ்ணன். முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகி வரும் இப்படத்தில் நாயகனாக நிர்மலும் நாயகியாக திவ்யாவும் நடித்துள்ளனர். மலேசிய நடிகர்கள் சிவபாலன், காந்திநாதன் போன்றோர் தவிர பலரும் புதுமுகங்களே. படம் பற்றி இயக்குநர் அமீனிடம் கேட்ட போது” இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். இது ஒரு அட்வெஞ்சர் பிலிம் எனலாம் தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பல விஷயங்களை தகர்த்து இப்படம் உருவாகியிருக்கிறது. திரைக்கதையின் புது உத்தியில் பயணிக்கிற படம்.” என்று கூறினார்.
படத்தின் கதை பற்றிக் கூறும் போது “இது ஒரு பயணம் பற்றிய படம். வெளிநாட்டிலிருந்து இந்தியா லரும் ஒரு காதல் ஜோடி மலைப்பிரதேசம் நோக்கிச் செல்லும் பயணம்தான் கதை. அந்த ஜோடி பயணத்தில் சந்திக்கும் சம்பவங்கள் போய்ச் சேர்ந்ததும் நடக்கும் திருப்பங்கள்தான் படம்.” என்கிறார் அமீன். ‘8எம்.எம்.’ என்பது என்ன என்ற போது “அதுதான் சஸ்பென்ஸ். என்கிறார். அட ,படத்தின் தலைப்பிலேயே புதிர் வைத்துள்ளாரே!

nirmal and dhivya 4

படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு என தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடக மலைப்பிரதேசங்களிலும் படமாகியுள்ளது. மலேசியாவிலும் சிலநாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ரெட் ‘5டி’ ஹெலி கேம் போன்ற கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தில் 4 பாடல்கள். பாடல்களுக்கு இசை முரளி. இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘ஸ்ரீ‘ படத்துக்கு இசையமைத்தவர். பின்னணி இசை எல்.வி.கணேசன். இவர் அண்மையில் வந்த ‘ஆதியும் அந்தமும்’ மற்றும் ‘பனிவிழும் நிலவு‘ படங்களின் இசையமைப்பாளர். நடனம்- சுபாஷ், .சண்டைப் பயிற்சி- முரளி.

sivabalan and narayanamoorthy 2
படத்தின் முதல்பாதி ஒரு விதத்திலும் மறுபாதி இன்னொரு விதத்திலும் திரைக்கதை பயணிக்கும் புதிய உத்தியை இயக்குநர் அமீன் கையாண்டிருக்கிறார். ஒளி, ஒலி இரண்டிலும் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் கொண்டு காட்சிகளை அழகு படுத்தியிருக்கிறார்கள். ஹீரோயிசம் இல்லாமல் அசட்டுத்தனமான காட்சிகளோ மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோ இல்லாமல் யதார்த்தமான போக்கில் உருவாகியிருக்கும் படம். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. தொழில் நுட்பப் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூனில் இசை வெளியீடு ஜூலையில் திரை வெளியீடு என்கிற மும்முரத்தில் இயங்கி வருகிறது படக்குழு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.