குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்?

செல்வ களஞ்சியமே – 70

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சென்ற இரண்டு வாரங்களாக குழந்தை வளர்ப்பில் கதை சொல்லுவது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம் என்று சில கதைகள் மூலம் பார்த்தோம்.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம் என்பது போலவே ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு விதமே. பெற்றோராய் இருப்பது சுலபமான காரியம் அல்ல. ஆனால் குழந்தை வளர்ப்பு புத்தகங்களும், வாய்மொழியிலும் பலவற்றை தெரிந்து கொள்ளும்போது எது சரி, எது தப்பு என்று சிலசமயம் குழப்பம் ஏற்படும்.  அதுவும் இந்த அவசர யுகத்தில், ஒரே குழந்தை, பெரியவர்கள் கூட இல்லாத நிலை, வெளிநாட்டு வாழ்க்கை என்று ஆகிவிட்டது. எது சரியான குழந்தை வளர்ப்பு என்று யாரைக் கேட்பது?

பெற்றோர்கள் எப்படி இருக்கவேண்டும்? கண்டிப்பாகவா அல்லது தழைந்து கொடுப்பவர்களாக, குழந்தையுடன் தோழர்களாகவா? பெற்றோர்கள் தாங்கள் எப்படி வளர்க்கப்பட்டார்களோ அப்படியேதான் தங்கள் குழந்தைகளையும் வளர்க்க முயலுவார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கையாளுவது வேறுவேறு விதமாகவே இருக்கும். ஒரு பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்தால் அடுத்தவரும் அதேபோல தங்கள் குழந்தையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை.

‘ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடற மாட்ட பாடி கறக்கணும்’ பாடல் போல கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்து, தோழமையாகவும் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது இருபத்துநாலு மணிநேர வேலை. இடைவெளி கிடையாது; வாரந்திர லீவு கிடையாது; விடுமுறை கிடையாது; குழந்தை வளர்ந்து பெரியவன்/ள் ஆனபிறகும் கவலைப்படுபவர்கள் பெற்றோர்கள்.
பெற்றோர்களிலும் இந்த அம்மாக்கள் தான் குழந்தைகளைப் பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள். கவலைபடுவதோடு மட்டுமல்ல; குழந்தைகளை இருபத்துநாலு மணிநேரமும் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க விழைபவர்கள். இவர்களுக்கு ‘ஹெலிகாப்டர் பெற்றோர்’ என்று பெயர்! எப்படி ஹெலிகாப்டர் ஒரு இடத்தை சுற்றி சுற்றி வருமோ அதேபோல இவர்களும் தங்கள் குழந்தைகளின் பின்னால் போய்க்கொண்டு இருப்பார்களாம். குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற நல்ல குறிக்கோள் இவர்களுக்கு இருந்தாலும், இப்படி எப்போதுமே கவனிப்பது சில சமயம் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். குழந்தைகளின் தன்னம்பிக்கை குறையும். அம்மாவின் விடாத கண்காணிப்பிலிருந்து தப்பிக்க குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது எந்தவிதப் பிரதிபலனும் கிடைக்காத வேலை. ஆனால் நீங்கள் செய்யும் ஒரு தவறுக்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும். ரொம்பவும் கண்டிப்புடனோ, ரொம்பவும் விட்டுக் கொடுத்தோ இருப்பது தவறு. ஏற்கனவே சொன்னது போல இரண்டுக்கும் நடுவில் ஒரு சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும் பெற்றோர்கள்.

GSK_8471
சில அம்மாக்கள் குழந்தைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

 

குழந்தைகள் இடத்தில் கண்டிப்பு இருக்க வேண்டும். ஆனால் கடுமை இருக்கக்கூடாது. அமெரிக்காவில் பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் குரல் உயர்த்திக் கூடப் பேசக்கூடாதாம். நம்மால முடியாதுப்பா! சமீபத்தில் ஒரு உறவினர் வீட்டிற்குப் போயிருந்தோம். பல வருடங்கள் அமெரிக்காவில் இருந்துவிட்டு இப்போது இந்தியா வந்திருக்கிறார்கள். மூன்று ஆண் குழந்தைகள். முதல் குழந்தை சாது. இரண்டாவதும் மூன்றாவது அப்பாவின் தலைமேல் (உண்மையிலேயே தலைமேல் தான்!!) ஏறி உட்கார்ந்து அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை கீழே தள்ளி, அவர்மேல் தொம் தொம்மென்று குதித்து…..(என்னால் தாங்கவே முடியவில்லை. வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்) இத்தனை அமர்க்களத்தின் நடுவில் அவரும் அவரது மனைவியும் தாழ்ந்த குரலில் ‘பண்ணாதம்மா, ப்ளீஸ் பண்ணாதம்மா’ என்று கெஞ்சுகிறார்கள். அடக் கடவுளே! இது என்ன மாதிரியான குழந்தை வளர்ப்பு? எனக்குப் புரியவேயில்லை. குழந்தையை அடிக்கக்கூடாது என்பதில் நானும் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஆனால் குழந்தைகள் எல்லை மீறி நம்மை தொந்திரவு செய்யும் போது உறுதியான குரலில் ஒரு ‘நோ’ சொல்லுங்கள். குழந்தைகளுக்குப் புரியும். இது கண்டிப்பு. நீங்கள் சொல்லும் ‘நோ’ வில் இனி இந்த செயல்களை நீங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டீர்கள் என்பது குழந்தைக்கு புரிய வேண்டும். அந்த அளவிற்கு அந்த ‘நோ’வில் கண்டிப்பு இருக்க வேண்டும்.

சில அம்மாக்கள் குழந்தைகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு ‘டைகர் மாம்’ என்று பெயர். உலகத்தில் சீன அம்மாக்கள் டைகர் மாம் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் குழந்தைகளை எல்லாவிதத்திலும் கட்டுப்படுத்துவார்களாம்.

டைகர் மாமின் (tiger Mom) அடையாளங்கள்:

 • ஏராளமான எண்ணிலடங்கா சட்டதிட்டங்கள்
  குழந்தைகள் கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு பல பல சட்டதிட்டங்களை போடுதல். இப்படிச் செய்வதை விட குறைந்த அளவு சட்டதிட்டங்களைப் போடுங்கள். அவற்றை குழந்தைகள் தொடர்ந்து கடைபிடிக்கட்டும்.
 • அனாவசிய அச்சுறுத்தல்கள்
  ‘நீ சரியானபடி நடக்கலைன்னா, உன் பொம்மைகளையெல்லாம் உடைச்சு போட்டுடுவேன்; உன்னை வீட்டை விட்டு வெளியே துரத்திடுவேன்’ என்கிற அச்சுறுத்தல்கள் நடைமுறை சாத்தியமில்லை என்று உங்களுக்கு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் தெரியும். இந்த மாதிரியான வெத்துவேட்டு அச்சுறுத்தல்கள் குழந்தையை இன்னும் மோசமாக நடந்துகொள்ள வைக்கும்.
 • உங்கள் கட்டுப்பாடுகள் பெற்றோர்கள் என்கிற உங்கள் எல்லையை மீறி இருக்கும்.
  வெளியில் உங்கள் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி நீங்கள் சட்டங்களைப் போடலாம். ஆனால் இந்த மாதிரியான பாடல்களைத் தான் கேட்கவேண்டும், பாட வேண்டும் என்று கட்டுபடுத்த முடியாது. உங்கள் ரசனை வேறு; குழந்தைகளின் ரசனை வேறு.
 • உங்களின் அன்புக்கும் விலை பேசுவீர்கள்
  ‘உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்…..நீ சமத்தா இருந்தேன்னா…’
  ‘உன்னால இதவிட நன்றாகப் பண்ணமுடியும்’ இந்த வார்த்தைகள் மந்திரம் போல வேலை செய்யும். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று வகைதொகை இல்லாமல் பேசாதீர்கள். நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை விட என்ன பேசுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். ‘நீ சரியான தண்டம். உனக்கு ஒண்ணும் வராது’ போன்ற சொற்கள் குழந்தையின் அடிப்படையையே அசைக்கும். ஜாக்கிரதை!

அடுத்த வாரம் தொடர்ந்து பார்க்கலாம்……!

“நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்?” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. மிக அருமையான பதிவு ரஞ்சனி நான் டைகர் மாம் இல்லை அன்பான இந்திய் அம்மாதான் எல்லா பெற்றோர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகிர்வு நான் என் பெண்ணிற்கு படித்துக் காட்டினேன் பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.